YOGA ASANAS

உலக சிருஷ்டியில் எத்தனை உயிரினங்கள் உள்ளனவோ அத்தனை ஆசனங்கள் உள்ளன. சிவபெருமானால் 84 இலட்சம் ஆசனங்கள் உருவாக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. அதில் 84 ஆசனங்கள் சிறந்தவை. அவற்றுள் 32 ஆசனங்கள் மிக முக்கியமானவை. அவற்றினை தொகுத்து வழங்கி உள்ளோம். அவற்றினை பயன்படுத்தி கொள்ளவும்.



ஆசனங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும்,


1 . நின்ற படி செய்யகூடியன.


2 . அமர்ந்தபடி செய்யகூடியன.


3 . படுத்தபடி செய்யக்கூடியன.


நின்றபடி செய்யக்கூடிய ஆசனங்கள்:




கோனாசனம்:

கால்களை 2 அடி அகட்டி வைக்கவும். கைகள் இரண்டினையும் படத்தில் காட்டியுள்ளபடி நேராக மேலே தூக்கவும். பின்னர் உடல் திருகாமல் வலப்புறம் படத்தில் காட்டியுள்ளபடி வளைக்கவும்.மறுபடியும் முதல்நிலைக்கு வந்து, இப்பொழுது அதே போல் இடது புறம் வளைக்கவும். மீண்டும் முதல்நிலைக்கு வந்து 3 முறை இதேபோல் செய்யவும். இந்த ஆசனம் செய்யும்போது மூச்சினை சீராக உள்ளிழுத்து வெளியில் விடவும்.


பலன்கள்:


  • விலா எலும்புகள் பலமடையும்.
  • கப நோய் நீங்கும்.
  • பெண்களுக்கு இடுப்பு மற்றும் பிருஷ்டம் பகுதிகளில் சதை போடாமல் தடுக்கலாம். 
திரிகோனாசனம்:


 
கால்களை 2அடி நகட்டி வைத்து கொண்டு கைகளிரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தி நேர்கோடு போல் வைக்கவும். மூச்சை வெளியில் விட்டுவிட்டு படத்தில் காட்டியபடி வளைந்து கைவிரலினால் இடது கால் பெருவிரலை தொடவேண்டும், தலையினை மேலேதிருப்பி கண்கள் வலதுகை பெருவிரலை பார்க்கவேண்டும். மீண்டும் முதல் நிலைக்கு வந்து மறுபுறம் அதாவது வலது கையினால் வலது கால்  பெருவிரலினை தொடவேண்டும். இந்த ஆசனத்தினை 3 -4 முறை செய்யவேண்டும்.


பலன்கள்:


  • முதுகு தண்டு பலமடையும்.
  • நுரையீரலுக்கு நல்லது.
  • குடல்களிலிருந்து மலம் சுலபமாய் வெளியேறும். 
  • முதுகு தசை புத்துணர்வு பெரும். முதுகுவலி,இடுப்புவலி நீங்கும்.